Thanner Thaneer
தண்ணீர் தண்ணீர்
ஆற்றுப் படுகையில் நடக்கின்றன மணற்கொள்ளையை தடுக்க மாட்டோம்!
ஏரி, குளம், கால்வாய்களை வீட்டுமனை ஆக்குவோம்! அவற்றைத் தூர்வாரமாட்டோம்!! விவசாயத்தை மதிக்க மாட்டோம்!!விவசாய பரப்பை அதிகரிக்க மாட்டோம்!! ஆறுகளை நச்சுக் கழிவுகளால் அசுத்தம் செய்வோம்!! மழை நீரை சேமிக்க மாட்டோம்!! மரங்களை வெட்டுவோம்!! மழைநீரை கடலில் வீணாக கலக்க விடுவோம்!! தடுப்பணைகள் கட்டமாட்டோம்!! தண்ணீரை காசிற்காக விற்போம்!! நதிகளை இணைக்க மாட்டோம்!! பிற மாநிலங்களிடம் கையேந்தி நிற்போம் அந்தத் தண்ணீருக்காக!!!
- இரா. அருள்ராஜ்
Comments
Post a Comment