நான் விரும்பும் தமிழ்நாடு


நான் விரும்பும் தமிழ்நாட்டின் கட்டமைப்பு :

தமிழ்நாட்டில் 12 மாநகராட்சிகள் உள்ளன அவற்றுள் சென்னைக்கு அளிக்கும் முக்கியத்துவம் மற்ற மாநகராட்சிகளுக்கு தரப்படுவது இல்லை .புதிய போக்குவரத்து கட்டமைப்புகள் சென்னையில் மட்டுமே உள்ளது.சென்னைக்கு அடுத்த பெரிய மாநகராட்சிகளான கோவை ,திருச்சி,மதுரை பகுதிகளில் சென்னையைப் போன்ற சாலை வசதி,ரயில் போக்குவரத்து,மெட்ரோ ரயில் திட்டங்களும் இன்னும் தொடங்கப்படவில்லை!! 
 இந்த மாநகராட்சி பகுதிகளில் சென்னையைப்போல தகவல் தொழில்நுட்ப நகரங்களும்,தொழிற்சாலைகளும்,உடகட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டால் சென்னையில் ஏற்படுகின்ற மக்கள் தொகை நெருக்கடி குறையும் . தமிழ்நாட்டின் முக்கிய நகரங்கள் இப்பொழுது மாநகராட்சி ஆக்கபட்டுவிட்டது !!இங்கே அனைத்து உள்கட்டமைப்பும் செய்யப்பட்டால் வேலை தேடி மக்கள் சென்னையை நோக்கி நகர்வது குறையும் .
  தமிழ்நாட்டு உட்கட்டமைப்பை பெருக்க தமிழ்நாட்டை 4 மண்டலங்களாக பிரிக்கலாம் 
1.வடக்கு மண்டலம் (சென்னை)
2.மேற்கு மண்டலம் (கோவை)
3.மத்திய‌ மண்டலம் (திருச்சி)
4.தெற்கு மண்டலம் (மதுரை)
  இந்த மண்டலங்களுக்கு ஒரு தலைநகரத்தை வைத்து‌ துணை நகரங்களை இனைக்கும் படி திட்டம் தீட்டலாம்.இங்கு முதலில் உள்ள நீர் வளங்களை இனைத்து பாசனம்,நீர் தடுப்பனை மற்றும் குடிநீர் வசதிகளை ஏற்படுத்தவேண்டும் .பின் பெரிய நகரங்களை சிறிய நகரங்களுடன்  இனைக்க 4/6/8 வழி  சாலைகளை ஏற்படுத்த வேண்டும். அனைத்து கிராமங்களையும் பெரிய நகரங்களுடன் இனைக்க 2 வழி சாலைகள் போடப்பட வேண்டும்.ஆறுகளுக்கு இடையே உள்ள கிராமங்களை மேம்பாலம்‌மூலம் இனைக்கப்பட வேண்டும்.தொடர்வண்டி தடத்தில் செல்லும் சாலைகளை கடக்க மேம்பாலங்கள் கட்டப்பட வேண்டும். 
   அனைத்து சிறிய நகரங்களிலும் மேல்நிலைப்பள்ளி ,பல் தொழில் கல்லூரி, கலைக் கல்லூரி, மருத்துவக் கல்லூரி, அரசால்              ஏற்டுபடுத்தப்பட வேண்டும் (நம் மாநிலத்தவர்க்கு மட்டுமே இடம் தர வேண்டும்)


புதிய‌‌ தொடர்வண்டி தடங்களையும் ,பறக்கும் தொடர் வண்டி தடங்களும் ,மெட்ரோ ரயில் தடங்களும்  உருவாக்க வேண்டும்.சிறிய விமான‌நிலையங்களும் ஏற்படுத்தப்பட வேண்டும்.
   
வேளாண்மையை ஊக்கப்படுத்த   அனைவரும்  விவசாயம் செய்ய நிலம் தரப்பட வேண்டும் . ஏற்கனவே விவசாயம் செய்பவர்க்கு ஊக்கம் தர வேண்டும்.
  
 பல நாட்டு‌ 
தொழிற்சாலைகளை இந்த‌ மண்டலங்களில் ஏற்படுத்தி மக்களை
அந்தந்த மண்டலங்களிலேய வேலை பார்க்கச் செய்யலாம்.இதனால் மக்களின் இடப்பெயற்ச்சி குறையும் .


  இவற்றை அடுத்த‌ 25-30 ஆண்டுகளில் செய்து முடிக்க வேண்டும் அப்படி செய்தால்‌ நம் மாநிலம் தன்னிறைவு பெற்றதாக இருக்கும்.
 
  

Comments

Popular posts from this blog

Aalaporan Tamizhan