Anitha the brave ariyalur girl!!
அனிதாவும் தமிழ்நாடும் :
ஏழ்மையான வாழ்க்கைச் சூழல், தாயின் மரணம்,மூட்டைத் தூக்கும் தந்தை மற்றும் பல காரணங்கள் தன்னை அச்சுறுத்தினாலும், விடாமுயற்சியாலும், தன்நம்பிக்கையாலும் மருத்துவர் ஆகியேதீரவேண்டும் என்ற முனைப்புடன் பத்தாம் வகுப்புத் தேர்விலும், பின் பன்னிரெண்டாம் வகுப்பிலும் நல்ல மதிப்பெண்கள் பெற்றும் மருத்துவப் படிப்பில் சேரத்தகுதியான கட்ஆப் மதிப்பெண் இருந்தும் மத்திய அரசு கொண்டு வந்த நீட்டால் தமிழக மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது.
நீட் தேர்வு என்றால் என்ன என்றே தெரியாத, அந்த தேர்வுக்கு பணம் கட்டி பெரு நகரங்களில் பயிற்சியில் சேர முடியாத, ஏழை எளிய, கிராமப்புற மாணவர்களில் ஒருவராக இருந்து அந்த தேர்வையும் எதிர்கொண்டு அதில் தேர்வாகாததால் உச்சநீதிமன்றம் வரை சென்று பின்பு அதிலும் நீதி கிடைக்காமல் வேறு படிப்பிற்கு போகலாமா என்று எண்ணிக்கொண்டிருந்த வேளையில் வந்தது அனிதாவின் தற்(படு)கொலை செய்தி.
இந்த விசயத்திற்குக் காரணம் மத்திய, மாநில அரசுகளே!! நீட் தேர்வு விவகாரத்தை தமிழ்நாட்டில் தொடங்கி வைத்தவர் அப்போதைய கல்வியமைச்சர் மா. பாண்டியராஜன் மற்றும் முதல்வர் ஓ. பி. எஸ். பின்னர் நடந்த கதை ஊருக்கே தெரியும்!! நீட் தேர்வை கொண்டு வரும்போதே மத்திய அரக்கு மாநில அரசு எதிர்ப்புத் தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் அதை செய்யவில்லை அரசு. பின் எதிர்கட்சிகளின் ஆதரவோடு இயற்றப்பட்ட சட்ட முன்வடிவை மத்திய அரசுக்கு அனுப்பிவிட்டு பின்னர் அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு தன் கட்சி விவகாரத்தை மட்டும் கவணித்து விட்டு, ஊழலால் தன் ஆட்சிக்கு பங்கம் வந்துவிடக்கூடாதென்று அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் டெல்லிக்கு பறந்து கொண்டும் இருந்தனர். அந்த நேரத்தில் அமைச்சர்கள் மாணவர்ளுக்கு பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்துக்கொண்டு இருந்தனர். பின் தேர்வும் பல குளறுபடிளுடன் நடந்து, பின் தேர்வு முடிவுகள் வந்தன!! மத்திய பாடத்தில் படித்தவர்கள்(தனி பயிற்சி வகுப்பில் பல இலட்சம் கட்டி பல மாதம் படித்தவர்கள்) அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றனர்.
தேர்ச்சி பெற்றவர்களுக்கு இப்போது கலந்தாய்வு நடந்து வருகிறது!!
குறைந்தபட்சம் 2 வருடம் விலக்கு வாங்கித் தருகின்றோம் என்று தமிழக அமைச்சர்களும், தமிழ்நாட்டின் சட்டமுன்வடிவு எங்கே என தெரியாது என்றும் நிர்மலா சீத்தாராமன் கூறினார். தோழர் ரங்கராஜன் அவர்கள் தமிழக கட்சிகள் உருவாக்கிய சட்டமுன்வடிவு யாரிடம் உள்ளது என்று ஆர். டி. ஐ மூலம் கேட்டார். அதற்கு வந்த பதில் கோப்பு குடியரசு அலுவலகத்திற்கு இன்னும் வரவில்லை என்று!!
நீட் தேர்வில் இருந்து விலக்கு கோறும் அந்த கோப்பை அனுப்பாமல் இழுத்தடிப்பு செய்தது மோடி அரசு. கடைசியாக நிர்மலா சீதாராமன் அவர்கள் தமிழக அரசிடம் இரு ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க முடியாது வேண்டுமானால் ஒரு ஆண்டுக்கு விலக்குத் தர முடியும் என்றார்! தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் முதல்வர் பழனிச்சாமி அதற்கான கோப்பை டெல்லிக்கு கொண்டு சென்றனர். அனைத்து மத்திய அமைச்சர்களையும் சந்தித்தனர். இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை மத்தியஅரசு நீதிமன்றத்தில் தமிழ்நாட்டிற்கு மட்டும் விலக்களிக்க முடியாது என கைகழுவியது!!
இத்தனையும் நடந்தேறியது இத்தனை நாட்களாய்!! இந்த நிகழ்வுகள் எல்லாம் மனதில் ஓடியதோ என்னவோ அனிதா தற்கொலை செய்து தமிழ் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார்.
தற்கொலை தவறான முடிவாகும் ஏனைய சூழ்நிலைகள் அவளை இப்படி செய்யத்தூண்டியுள்ளது.இனி யாரும் இப்படிப்பட்ட முடிவை எடுக்க வேண்டாம்!!
உடனே சில பேர் தமிழ்நாட்டு பாடத்திட்டத்தை மாற்ற வேண்டும் சி. பி. எஸ். சி பாடத்துக்கு மாற வேண்டும் என்று சொல்கின்றனர் இவ்வளவு வருடமும் தலைசிறந்த மருத்துவர்களை தமிழ்நாடு உருவாக்கியுள்ளது. இந்தியாவின் மருத்துவத் தலைநகராக விளங்குவது தமிழ்நாடே. வெளிநாட்டில் இருந்து பல நோயளிகள் மருத்துவச் சுற்றுலாவிற்கு அதிகம் வருவது தமிழ்நாட்டிற்கே!! கிராமம் தோறும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்பட்டு நன்றாக செயல்படுத்தப்பட்டு வருகிறது!! தாய் சேய் இறப்பு விகிதம் இந்தியாவிலேயே மிகக் குறைவு இங்கேதான்!! இன்னும் பல குறியீடுகளில் தமிழ்நாடு முன்னேதான் உள்ளது!! மருத்துவ மேற்படிப்பு இடங்கள் அதிகம் உள்ள மாநிலம் தமிழகமே!!
இவ்வளவு சாதனைகளை புறிந்தது இதே தமிழ்நாட்டின் நீட் நுழைவுத்தேர்வு எழுதாத மாணவர்களாளே!!
இவற்றையெல்லாம் தமிழ்நாட்டிடம் இருந்து பறிக்க மத்திய அரசு முயல்கிறது!!
இப்படி எந்த உட்கட்டமைப்போ மருத்துவக் கல்லூரிகளோ இல்லாத வட மாநில மாணவர்களுக்கு முதலில் மத்திய அரசு உதவட்டும்.மத்திய அரசு மாநில உரிமைகளை பறிக்காமல் தனக்குரிய எல்லையோடு நிற்க வேண்டும்!! நீட் தேர்வில் விருப்பமில்லாத மாநிலங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும்!! கல்வியை மாநிலப்பட்டியலில் இணைக்க வேண்டும்!! தமிழ்நாட்டில் +2 மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ சேர்க்கை நடத்தப்பட வேண்டும். வேண்டுமானால் சி. பி. எஸ். சி மாணவர்களுக்கு குறிப்பிட்ட சில சதவிகிதம் தரலாம். தமிழ்நாட்டில் மருத்துவ இடங்களை அதிகரிக்கலாம்!!
இந்த நிலை நாளைக்கு பொறியியலுக்கும் வரலாம். இந்தியாவிலேயே அதிக பொறியியல் கல்லூரிகள் தமிழ்நாட்டிலேதான் உள்ளது!! வருடத்திறகு 1 இலட்சம் இடங்கள் காலியாகின்றன. இதனை தடுக்க பல நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்!! பொறியியலில் செய்முறைக் கல்விக்கு முக்கியத்துவம் தரவேண்டும். தற்போதைய தொழில் நுட்பத்திற்கு ஏற்ப பாடத்திட்டம் மாற்றப்பட வேண்டும்!! வேலைவாய்ப்புகள் பெறுக வேண்டும்!
11-12 வகுப்பு படிக்கும் மாணவர்கள் இப்போதே தங்கள் குறிக்கோளை அமைத்துக்கொண்டு பயிற்சியைத் தொடங்க வேண்டும்!! தோல்விகளை படிக்கல்லாக மாற்றி வெற்றி பெற வேண்டும்!!
அரசு, ஏழை மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு மேற்படிப்பிற்கான பயிற்சி அளிக்க வேண்டும். மாணவர்கள் அனைவரும் தங்களது குறிக்கோள்களை அடைய வேண்டும்! நம்மிடையே ஏற்றத்தாழ்வு இல்லாமல் அனைவரும் வெற்றி பெற அனைவரும் ஒன்றுபடுவோம்!! வாழ்க தமிழ்!!

Comments
Post a Comment